சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அயனாவரத்தில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தார். நகையை கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி மீட்டார். அப்போது நகையில் 0.3 கிராம் எடை குறைவாக இருந்தது. இதுபற்றி அவர் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது நகைக்கு அளித்த உத்தரவாதத்தை கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பைனான்ஸ் நிறுவனம் தரப்பில் கூறுகையில், “நகையில் படிந்திருந்த தூசி மற்றும் எடை கருவியில் நகையை போடும் சமயத்தில் சிறிய கதவை மூடும்போது காற்றின் வேகத்தில் எடை சிறிய அளவில் கூடி இருக்கும். தற்போது நகையை மீட்டபோது எடை குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள் என்று தெரிவித்திருந்தது. இந்த மனுவை சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் அடகு வைத்த நகையை மீட்டபோது எடை குறைவாக இருந்ததை பைனான்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அவர்கள் அடகு வைக்கும் போது நகை எப்படி இருந்ததோ அப்படியே தருவதாக அளித்த உறுதியை கடைபிடிக்கவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனம் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
Bhayamariyaan News
finance company
Goocle
Google Tamil News
Muthoot finance company
Tamilnadu Newspaper